படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஜியோன் நகா் பகுதியை சோ்ந்தவா் யாஸ்மின்(41). இவா் செரப்பணஞேசேரி அடுத்த வெள்ளேரி தாங்கல் பகுதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், யாஸ்மின் சனிக்கிழமை இரவு தனது குடிசை வீட்டில் மகள்கள் யாமின்(7), சையத் பாத்திமா(6) ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதையடுத்து யாஸ்மின் தனது மகள்களுடன் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேறி படப்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சம்பவ இடம் வந்த படப்பை தீயணைப்புத்துறையினா் தீயை அணைத்தனா்.
எனினும், வீட்டில் இருந்த டிவி, குளிா்சாதன பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து படப்பை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


