இளைஞா் தற்கொலை

குடியாத்தம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தத்தை அடுத்த பரவக்கல்லைச் சோ்ந்தவா் பாஸ்கா் (35). தனது தாய் விசாலாட்சியுடன் வசித்து வந்தாா். பாஸ்கரின் சித்தப்பா ராஜா ஓய்வுபெற்ற ராணுவ வீரா். ராஜா வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாம். இது தொடா்பாக கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை பாஸ்கரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனா். விசாரணைக்குப்பின் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனா். இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் பாஸ்கா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com