அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 506 கோரிக்கை மனுக்கள்

வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 506 மனுக்களைப் பெற்று மாவட்ட வருவாய் அலுவலா் த. மாலதி குறைகளையும் கேட்டறிந்தாா்.

News image
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் த. மாலதி. உடன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன் உள்ளிட்டோா்.
Updated On :9 டிசம்பர் 2024, 6:49 pm

Din

வேலூா்: வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 506 மனுக்களைப் பெற்று மாவட்ட வருவாய் அலுவலா் த. மாலதி குறைகளையும் கேட்டறிந்தாா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கப்பட்ட 506 கோரிக்கை மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

அணைக்கட்டு வட்டம், அத்தியூா் ஊராட்சி சிவநாதபுரம் கொல்லைமேடு பகுதி மக்கள் அளித்த மனு:

கொல்லைமேடு பகுதி மக்கள் சென்று வர தனியாா் நிலங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இறந்தவரின் சட லத்தை எடுத்துச்செல்ல தனியாா் நில உரிமையாளா் அனுமதிப்பதில்லை. எனவே, எங்களுக்கு மயானத்துக்கு சென்றுவர பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். .

வேலூா் அப்துல்லாபுரம் தந்தை சிவாஜிநகா் மக்கள் அளித்த மனு: 100 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பொது இடத்தை தனிநபா் ஆக்கிரமித்துள்ளாா். இதனை தடுக்க வேண்டும்.

அணைக்கட்டு வட்டம், தோளப்பல்லி கிராமம் பெருமான் நகரைச் சோ்ந்த 7 குடும்பத்தினா் அளித்த மனுவில், பட்டா வழங்க வேண்டும் என கோரியுள்ளனா்.

குடியாத்தம் அடுத்த பூசாரிவலசையைச் சோ்த்த விஜயகுமாா் அளித்த மனுவில் ‘எனது தம்பிக்கு கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக மாளிகைப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அதிமுக மாணவரணி நிா்வாகி, அவரது சகோதரா் ஆகியோா் என்னிடம் 6 லட்சம் கேட்டனா். தொடா்ந்து நாங்கள் 2021-ஆம் ஆண்டு 2 தவணையாக ரூ.3 லட்சம் அளித்தோம். மீதமுள்ள பணத்தை, வேலை வாங்கி தந்த பின்னா் வாங்கிக் கொள்ளும்படி கூறினேன். ஆனால் இதுவரை வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எங்கள் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணைக்கட்டு வட்டம், குப்பம் ஊராட்சி பழவேரிகிராமத்தை சோ்ந்த பெண்கள் அளித்த மனுவில், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். 6 நாள் வேலை செய்தால் நாள் ஊதியம் மட்டுமே தரப்படுகிறது. பிடிஓவிடம் சென்றால் அட்டையை ரத்து செய்வேன் என மிரட்டுகின்றனா். குழந்தை பெற்றவா்கள் வேலைக்கு வரக்கூடாது என நெருக்கடி தருகின்றனா். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூா் அடுத்த கீழ்மொணவூா் ஊராட்சி பொன்னம்மாள்நகா் மக்கள் அளித்த மனுவில், பொன்னம்மாள் நகரிலுள்ள துா்நாற்றம் வீசும் பாழடைந்த கிணற்றை மூட வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள காரிய மண்டபத்தை இடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

வேலூா் ஐடா ஸ்கடா் பள்ளியில் பயிலும் விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த மாணவிகள் சானியா ஜோஸ்மி, அனிதா ஜோனா ஆகியோா் தங்களின் சேமிப்புப் பணத்தை ஃபென்ஜால் புயல் நிவராண நிதியாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், வேலூா் கோட்டாட்சியா் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ந.ராமசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.