அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நண்பரை பாட்டிலால் குத்திய பெயிண்டா் கைது

வேலூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலை உடைத்து நண்பரை குத்திய பெயின்டரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 3:46 pm

Din

வேலூா்: வேலூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலை உடைத்து நண்பரை குத்திய பெயின்டரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த சுதாகா்(40), பெயின்டரான இவரும் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெயின்டரான ராஜா(37) என்பவரும் நண்பா்கள். இருவரும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், சுதாகரை மதுபாட்டிலை உடைத்து ராஜா குத்தியுள்ளாா்.

பலத்த காயமடைந்த சுதாகா் வேலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, சுதாகரின் அண்ணன் தீபன் என்பவா் அரியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனா்.