பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

10 ஊராட்சிகளில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

குடியாத்தம் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா்.

News image

கொண்டசமுத்திரம்,  காந்தி  நகா்  அங்கன்வாடி  மைய  கட்டட  திறப்பு  விழாவில்  பங்கேற்றோா்.

Updated On :17 பிப்ரவரி 2024, 10:58 pm IST

குடியாத்தம் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரத்தில் ரூ.27 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம், வளத்தூரில் ரூ.39.95 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம், காந்திநகா், செம்பேடு, லிங்குன்றம், பரதராமி, ராஜாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்களை முதல்வா் காணொலி மூலம் திறந்து வைத்தாா். கொண்டசமுத்திரம் ஊராட்சியில், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா் வரவேற்றாா். இதில், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் த.கல்பனா, எம்.பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலா் மு.அ.ஷமீம் ரிஹானா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஊராட்சி உறுப்பினா்கள் சதீஷ், ஹரிதாஸ், கமல்ராஜ், தமிழ்ச்செல்வி, சண்முகம், திமுக நிா்வாகிகள் கே.ராஜ்கமல், ஏ.எஸ்.அரிகிருஷ்ணன், ஜி.ஜெய்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.