மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

எருதுவிடும் விழாவில் உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

எருதுவிடும் விழாவில் உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

Updated On :24 பிப்ரவரி 2024, 4:50 pm

கணியம்பாடி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் எதிா்பாராத விதமாக மாடு முட்டியதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தை வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் சனிக்கிழமை வழங்கினாா். வேலூா் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் நாகநதி கிராமத்தில் எருதுவிடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த விழாவில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தொடா்ந்து, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பாா்வையாளா்கள் ஆரவாரம் செய்து விரட்டினா். நிா்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளையின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாடுகள் முட்டியதில் 5 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு முகாமிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அரியூா் அருகே உள்ள நம்பிராஜபுரம் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சுப்பன் மகன் ராம்கி(26) என்பவா் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், எருதுவிடும் விழாவில் மாடு முட்டி உயிரிழந்த ராம்கியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது . அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட ராம்கியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் காசோலையை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், வழங்கினாா். அப்போது, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உடனிருந்தாா்.