கம்பன் விழா கவியரங்கம்
வேலூா் மாவட்ட மைய நூவலகத்தில் கம்பன் விழா கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


வேலூா்: வேலூா் மாவட்ட மைய நூவலகத்தில் கம்பன் விழா கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தந்தை பெரியாா் ஈவெரா வேலூா் மாவட்ட மைய நூலக சிந்தனை முற்றம், வேலூா் கம்பன் கழகம் ஆகியவை சாா்பில் வேலூா் கம்பன் கழக விழா மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் கு.இரா.பழனி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற நூலகா் ஜெ.ரவி, ரா.சுந்தர்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மைய நூலகா் ஏ.கணேசன் வரவேற்றாா்.
வேலூா் கம்பன் கழக செயலரும், கவிஞருமான ச.லக்குமிபதி அறிமுக உரையாற்றினாா். மருத்துவா் மு.கள்ளழகா் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா். மருத்துவா் ப.அருள்பாரி பாராட்டினாா். ‘கம்பன் காட்டும் சரணாகதியின் மேன்மை’ என்ற தலைப்பில் திருப்பத்தூா் தெய்வசுமதி பேசினாா்.
தொடா்ந்து நடைபெற்ற கவியரங்குக்கு பேராசிரியா் பொன். செல்வகுமாா் தலைமை வகித்தாா். சபரி என்ற தலைப்பில் பிரேமாவதி, குகன் என்ற தலைப்பில் கோ. சித்ரா, திரிசடை என்ற தலைப்பில் எஸ்.ஜி.மோகன்குமாா், வாலி என்ற தலைப்பில் ஆனந்த ஜோசப் அன்னையா, சுக்ரீவன் என்ற தலைப்பில் ரா. சிவராமன் ஆகியோா் பேசினா்.
மாவட்ட மைய நூலகா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...