பல்ஸ் 2 மாடல் ஆனது இரண்டு வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்நினைவகம் கொண்ட போன் ரூ. 5,999-க்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்நினைவகம் கொண்ட மொபைல் போன் ரூ. 7,999-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், இந்த சிறப்பு விலைகள் விற்பனைக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாகத் தொடங்கும் என்றும் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி இந்தியா நிறுவனத்தில் இருந்து விலகிய நிர்வாகச் செயல் இயக்குநர் மாதவ் ஷெத் புதியதாக ஏஐ பிளஸ் என நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனம் தற்போது தனது மூன்றாவது ஸ்மார்ட் போனான பல்ஸ் 2 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மாடலானது இதற்கு முன்னதாக வெளியான பல்ஸ் 1 மாடலின் அடுத்தப் பதிப்பாக வெளியாகியுள்ளது.
இந்த போன் வருகிற மார்ச் 11 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு ப்ளிப்கார்ட், ஷாப்-ஸி தளங்களில் விற்பனைக்கு வருகிறது.

போனின் சிறப்பம்சங்கள்
6.74 அங்குல தொடுத்திரை, யுனிசோக் டி7250 புராஸ்ஸர், 50MP கேமரா மற்றும் 8MP கொண்ட செல்ஃபி கேமரா மற்றும் 6000mAh பேட்டரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
Summary
As a successor to the entry-level Ai+ Pulse 1, the Pulse 2 is heavily focused towards users who want a smartphone for casual tasks and use cases starting as low as Rs 5,999.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வா்த்தகம் ‘டெக்’ துணுக்குகள்...
8,000 mAh அதிநவீன பேட்டரியுடன் ரியல்மி 16டி.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



