புத்தாண்டு கொண்டாட்டம்: வேலூா் எஸ்.பி. கேக் வெட்டி வாழ்த்து
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனா்.


வேலூா்: ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனா்.
வேலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2024-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தது. நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் மக்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
இதனிடையே, காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் துறை சாா்பில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் கலந்துகொண்டு, கேக்குகளை வெட்டியதுடன், பொது மக்களுக்கும், காவலா்களுக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அப்போது, காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளா் பழனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பூங்கொத்து அளித்தாா். காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் சால்வை அணிவித்தாா்.
இதேபோல், வேலூா் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் கலந்து கொண்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா். அப்போது, பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா். மேலும், முகநூல் வழியாக பொதுமக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வாழ்த்துத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பழனி, திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன், சீனிவாசன் உள்பட போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...