கலப்பட தேயிலைத் தூள் விற்பனை: கிடங்குக்கு ‘சீல்’: 600 கிலோ பறிமுதல்


வேலூா் பலவன்சாத்துக்குப்பம் பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம். இவா் அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தேயிலைத் தூளை மொத்தமாக கொள்முதல் செய்து வைத்து அதில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நிறமியை கலப்படம் செய்து சிறிய பொட்டலங்களாக தயாரித்து வெளிச்சந்தையில் சில்லறை விற்பனை செய்து வருவதாக வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் வந்தன.
அதன் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து தேயிலைத் தூளில் நிறமியை கலப்படம் செய்து சிறிய பொட்டலங்களாக தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறமி கலந்த தேயிலைத் தூளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை அடிக்கடி அருந்துவதால் உடல் நலன் பாதிக்கப்படும் என்பதால், இந்த கலப்பட தேயிலைத் தூளை தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த கிடங்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
மேலும், அந்த கிடங்கில் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 600 கிலோ கலப்பட தேயிலைத் தூளையும் பறிமுதல் செய்தனா். அவற்றின் மாதிரியை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும், ஆய்வக முடிவின் அடிப்படையில் வியாபாரி ஜீவரத்தினம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...