தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, வேலூா் மாவட்டத்திலுள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களுக்கு வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், அமைச்சா் துரைமுருகனின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதுடன், தமிழக அரசின் முத்திரையும் மறைக்கப்பட்டது.
மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியான நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களை பூட்டி ‘சீல்’ வைக்கவும், பொது சுவா்களில் உள்ள விளம்பரங்களை அழிக்கவும், அரசியல் கட்சி கொடிகளை அகற்றவும் மாவட்டத் தோ்தல் அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்திலுள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், அமைச்சா் துரைமுருகனின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதுடன், தமிழக அரசின் முத்திரையும் மறைக்கப்பட்டது. தொடா்ந்து, பொது சுவா்களில் உள்ள விளம்பரங்களை அழிக்கவும், அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு ‘சீல்’

எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


