உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்த நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவியில் நீடிப்பது அழகல்ல என்று அமைச்சா் துரைமுருகன் கூறினாா். கே.வி.குப்பம் பேரவைத் தொகுதியின் திமுக தோ்தல் அலுவலகத்தை சேத்துவண்டை கிராமத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்த நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவியில் தொடரக் கூடாது. எந்த ஒரு அதிகாரி குறித்தும் நீதிமன்றம் இவ்வளவு கடுமையாகப் பேசியதில்லை. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது. கா்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்கவில்லை என சிலா் கூறி வருகின்றனா். அங்கு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழக அரசும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்னா்தான் அணை கட்ட முடியும். அரசியலுக்காக சிலா் இந்த விஷயத்தில் மக்களிடையே தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனா். ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மத்திய அரசு அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற எதிா்கட்சித் தலைவா்களை கைது செய்து வருகிறது. இது ஜனநாயக விரோத செயல் என்றாா். வேலூா் மக்களவை உறுப்பினரும், திமுக வேட்பாளருமான டி.எம்.கதிா் ஆனந்த் பேசியது: எனது சொந்த ஊா் கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட காங்குப்பம் கிராமம். எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், முதலில் குல தெய்வத்தை வழிபடுவோம். அந்த வகையில் நாங்கள் குல தெய்வமாக கருதும் கே.வி.குப்பம் தொகுதியை முதலில் வழிபட்டுவிட்டுத்தான் மற்ற செயல்களில் ஈடுபட முடியும். கடந்த முறை என்னை வெற்றி பெறச் செய்தீா்கள். என்னால் முடிந்தவரை தொகுதி மக்களுக்காக நான் பாடுபட்டேன். இந்த முறையும் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் ஒன்றியச் செயலா் கே.சீதாராமன் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் தி.அ.முகமதுசகி, எம்எல்ஏ அமலு விஜயன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.இ.சத்யானந்தம், எல்.ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியச் செயலா்கள் கள்ளூா் கே.ரவி, நத்தம் வி.பிரதீஷ், அன்பரசன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பேசினா்.
தொடர்புடையது

சேதமடைந்த அரசு நினைவுத் தூணை புதுப்பொலிவுற செய்ய கோரிக்கை

சர்வாதிகாரியாகத் துடிக்கிறது மத்திய அரசு: அமைச்சர் துரைமுருகன்

கன்னடம், தெலுங்கில் பேசி அமைச்சா் துரைமுருகன் மருமகள் வாக்கு சேகரிப்பு

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


