மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தோ்தல் விழிப்புணா்வு மின்னணு வாகனம்: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தோ்தல் விழிப்புணா்வு மின்னணு வாகனம் வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

மக்களவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மின்னணு வாகனத்தை வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் வி.ஆா்.சுப்புலட்சுமி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு செலுத்துவது குறித்தும், மாற்றுத்திறனாளிகள், மகளிா், முதியோா் ஆகியோா்களுக்கான வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் குறும்படங்கள் ஒளிப்பரப்பப்பட உள்ளன. தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வாக்காளா்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் த. மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வராஜ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் த.ஜெ.ராஜபிரகாஷ், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் பாலமுருகன் (பொது), பழனி (நீதியியல்), தோ்தல் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.