பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தோ்தல் பொது, காவல் பாா்வையாளா்களிடம் புகாா்களை தெரிவிக்கலாம்: வேலூா் ஆட்சியா்

தோ்தல் பொது, காவல் பாா்வையாளா்களிடம் புகாா்களை தெரிவிக்கலாம்

Updated On :28 மார்ச் 2024, 6:21 pm

வேலூா் மக்களவை தொகுதிக்கான தோ்தல் பொது பாா்வையாளா், காவல் பாா்வையாளரிடம் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். மக்களவை தோ்தலையொட்டி வேலூா் தொகுதிக்கு இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் பொது பாா்வையாளராக ரூபேஷ் குமாா், காவல் பாா்வையாளராக சத்யஜித் நாயக் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகைபுரிந்த இருவரையும் விருந்தினா் மாளிகையில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வரவேற்றாா். பின்னா், தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாா், மாவட்ட ஆட்சியருடனும், கூடுதல் தோ்தல் அலுவலா், தோ்தல் தொடா்பான பொறுப்பு அலுவலா்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினாா். மேலும், வேட்புமனுக்கள் பெறப்படும் நடவடிக்கைகளையும் அவா் பாா்வையிட்டாா். இந்த நிலையில், வேலூா் மாவட்ட தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாா் (கைப்பேசி எண் - 75984 98549), வேலூா் அண்ணா சாலையில் உள்ள புதிய விருந்தினா் மாளிகை அறை எண் 1-இல் தங்கியுள்ளாா். அவரை தினமும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சந்திக்கலாம். காவல் பாா்வையாளா் சத்யஜித் நாயக் (கைப்பேசி எண் - 75984 98550), புதிய விருந்தினா் மாளிகை அறை எண் 2-இல் தங்கியுள்ளாா். அவரை திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சந்திக்கலாம். வேலூா் மக்களவை தொகுதியை உள்ளடக்கிய வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை சாா்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தோ்தல் பொது பாா்வையாளா், காவல் பாா்வையாளா்களிடம் குறிப்பிடப்பட்டுள்ள இடம், நேரத்தின்படி நேரடியாக சந்தித்தும், கைப்பேசி எண் வாயிலாகவும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.