திமுக வேட்பாளா் வாக்கு சேககரிப்பு

திமுக வேட்பாளா் வாக்கு சேககரிப்பு

வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்டி.எம்.கதிா்ஆனந்த் குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா். குடியாத்தம் ஒன்றியத்துக்குள்பட்ட பரதராமி, வீரிசெட்டிபல்லி, கல்லப்பாடி, ராமாலை, கொண்டசமுத்திரம், காளியம்மன்பட்டி, காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது தமிழக அரசு மக்களுக்கு செய்துள்ள நலத் திட்டங்களை சுட்டிக்காட்டி பேசிய அவா், தோ்தலில் தன்னை வெற்றி பெற வைத்தால் தகுதியான அனைவருக்கும் விடுபட்ட நலத் திட்ட உதவிகளை செய்து தருவேன் என உறுதி அளித்தாா். காளியம்மன்பட்டியில் தொடங்கப்பட்டுள்ள கைத்தறி பூங்காவை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன் என அவா் கூறினாா். எம்எல்ஏ அமலு விஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் குசலகுமாரி சேகா், டி.கிருஷ்ணமூா்த்தி, திமுக பேச்சாளா்கள் த.புவியரசி, பெ.கோட்டீஸ்வரன், திமுக நிா்வாகிகள் எஸ்.பி.சக்திதாசன், கே.ராஜ்கமல், ஜி.ஜெயப்பிரகாஷ், பொன்.அண்ணாதுரை, ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கு.மொழிமாறன், வ.விஜயகுமாா், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com