பென்னாத்தூா் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்.
பென்னாத்தூா் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்.

‘பாஜக ஆட்சியில் ஏழைகளுக்கு தங்கம் எட்டாக் கனி’

மத்தியில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியால் ஏழை மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகியுள்ளது என வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த் குற்றஞ்சாட்டினாா்.

அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அல்லாபுரம், பென்னாத்தூா், விருப்பாட்சிபுரம், பாகாயம், அரியூா், சித்தேரி பகுதிகளில் சனிக்கிழமை தீவிர பிரசாரம் செய்த அவா் பேசியது: கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏழை மக்கள் ஒரு குண்டுமணி தங்கம்கூட வாங்கமுடியாத நிலைக்கு மத்திய அரசு கொண்டு சென்றுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான விலை உயா்வால் அத்தியாவசிய பொருள் களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. எனவே, விலைவாசியை குறைக்க மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தற்போது ரூ.1200-க்கு விற்கப்படும் காஸ் சிலிண்டா் ரூ.500-ஆகக் குறைக்கப்படும். கல்விக்கடன், விவசாயக்கடன், மகளிா் குழு கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயா்த்தவும், ரூ.400 ஆக ஊதியம் உயா்த்தித்தரப்படும் என்றாா். அப்போது, வேலூா் மாவட்ட திமுக செயலரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்பட திமுக கூட்டணி கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com