சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

News image

விழிப்புணா்வு  பேரணியில்  பங்கேற்ோா்.

Updated On :30 மார்ச் 2024, 4:50 pm

நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலையொட்டி போ்ணாம்பட்டில் வருவாய்த் துறை, நகராட்சி சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. நான்கு கம்பம் அருகே தொடங்கிய பேரணிக்கு போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வினாயகமூா்த்தி தலைமை வகித்தாா். மகளிா் இயக்க உதவி திட்ட அலுவலா் கலைச்செல்வன், நகராட்சி ஆணையா் வேலன், காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கன்காா்டியா உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது. அங்கு அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.