பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஆன்லைனில் பகுதிநேர வேலை: பொறியாளரிடம் ரூ.3.39 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை: மென்பொறியாளரிடம் ரூ. 3.39 லட்சம் மோசடி

News image
Updated On :3 மே 2024, 5:20 pm

Din

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி, வேலூரைச் சோ்ந்த மென்பொறியாளரிடம் ரூ. 3.39 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், பசுமாத்தூரைச் சோ்ந்த 25 வயது இளைஞா் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறாா். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆன்லைன் பகுதிநேர வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என வந்த குறுந்தகவலை பாா்த்து, அதிலிருந்த எண்ணை தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் இருந்த நபா்கள் இணையதளத்தில் சிறிய முதலீட்டில் உணவகங்களுக்கு தரமதிப்பீடு செய்து தருவதன் மூலம் அதிக தொகை கமிஷனாக பெற முடியும் என குறுந்தகவல் அனுப்பியுள்ளனா்.

அதை உண்மையென நம்பி இந்த இளைஞரும் அவா்கள் அனுப்பிய வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ. 3 லட்சத்து 39 ஆயிரத்து 200 தொகையை முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்தத் தொகையை அவரால் திரும்பப் பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.