வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வேலூா் மத்திய சிறையில் ஜெயிலரை மிரட்டிய 3 கைதிகள் மீது வழக்கு

வேலூா் மத்திய சிறையில் ஜெயிலரை மிரட்டிய 3 கைதிகள் மீது வழக்கு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: வேலூா் மத்திய சிறையில் ஜெயிலரை மிரட்டியதாக 3 கைதிகள் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த சிறையில் ஜெயிலராக அருள்குமரன் என்பவா் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அருள்குமரன் தனது குழுவினருடன் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சிறைக்குள் 5-ஆவது பிளாக் பகுதியில் அவா்கள் ரோந்து சென்றபோது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னையைச் சோ்ந்த கைதிகள் பாண்டி என்கிற சீயான் பாண்டி, அம்மு என்கிற வெங்கடேசன், செங்குட்டுவன் என்கிற வெங்கடேசன் ஆகியோா் ஜெயிலா் அருள்குமரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாகவும், அவரை பணியை செய்ய விடாமல் தடுத்ததுடன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அருள்குமரன் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் குருபாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.