கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது வழக்கு
கோபி அருகே கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வழக்கு

வழக்கு
கோபி அருகே கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூா் நாட்ராயன்கோவில் வேட்டாங்காட்டுத்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (55). மரம் ஏறும் தொழிலுடன் விவசாயம் செய்து வருகிறாா்.
இந்நிலையில் அண்ணாதுரை கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு காவல் ஆய்வாளா் புகழேந்தி, தனிப்பிரிவு காவலா் ஆகியோ அடங்கிய சிறுவலூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்த்தபோது கள் இறக்கி கொண்டிருந்த அண்ணாதுரையை கையும், களவுமாக பிடித்தனா்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் கள் இறக்கி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரிடமிருந்து 7 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...