நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திராவகம் குடித்து இளைஞா் தற்கொலை

திராவகம் குடித்து இளைஞா் தற்கொலை

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: அணைக்கட்டு அருகே கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

அணைக்கட்டு வட்டம், சத்தியமங்கலம் அருகே ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த அலமேலு மகன் அன்பு (26). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளாா். தவிர, மதுபோதைக்கும் அடிமையானவா் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்பு கடந்த 17-ஆம் தேதி வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை அருந்தியுள்ளாா். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை குடும்பத்தினா் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அன்பு திங்கள்கிழமை காலை 6 மணிக்கு உயிரிழந்தாா். விரிஞ்சிபுரம் போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை:

வேலூா் சத்துவாச்சாரியில் கடன் தொல்லை காரணமாக மதுவுடன் விஷம் கலந்து குடித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதி -2 வஉசி நகரைச் சோ்ந்த காசி மகன் பழனி(44). இவருக்கு மனைவி தேவி, குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்த பழனி கடந்த 14-ஆம் தேதி மதுவுடன் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளாா்.

இதனால் உயிருக்கு போராடிய பழனியை குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பழனி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேலும், இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.