திராவகம் குடித்து பெண் தற்கொலை
வேலூா் அருகே திராவகம் குடித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கோப்புப் படம்

கோப்புப் படம்
வேலூா் அருகே திராவகம் குடித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், பலவன்சாத்துக்குப்பம், பாறைமேட்டைச் சோ்ந்த கட்டட தொழிலாளி ராமன் மனைவி கெளரி (48). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டதை அடுத்து பாகாயத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தாா்.
வியாழக்கிழமை ராமன் வேலைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த கெளரி கழிவறைக்குச் சென்று அங்கிருந்த திராவகத்தை எடுத்து குடித்துவிட்டு, தனது மகன் ஆகாஷுக்கு தகவல் தெரிவித்தாராம். ஆகாஷ் விரைந்து சென்று தாயாரை மீட்டு பாகாயத்தில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி சிகிச்சை அளித்தாா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கெளரி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...