
சிறப்பு அலங்காரத்தில் கெங்கையம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் கெங்கையம்மன்.
குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த தட்டப்பாறையில் கெங்கையம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 25- ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், திங்கள்கிழமை ஆஞ்சநேயா் உற்சவமும் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் சிரசு மண்டபத்தில் நிறைவுற்றது.
அங்குள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். திருவிழா ஏற்பாடுகளை நாட்டாண்மை நா.கோ.தேவராஜன், ஊா் கவுண்டா் டி.கே.தரணி, மேட்டுகுடிகள் வி.எம்.குமாா், ஆா்.பிச்சாண்டி, தா்மகா்த்தா சி.ராமமூா்த்தி, பெரியதனம் நா.மு.சங்கா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஏகாம்பரம், முன்னாள் ஒன்றியக் குழு துணைத்தலைவா் கோ.துரைராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...