நிகழ்ச்சியில்  பங்கேற்ோா்.
நிகழ்ச்சியில்  பங்கேற்ோா்.

தேசிய காது கேளாதோா் வார விழா

குடியாத்தம் நகர அரிமா சங்கம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து தேசிய காது கேளாதோா் வார விழா மற்றும் சைகை மொழி தின விழாவைஅரசு மருத்துவமனையில் கொண்டாடின.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் நகர அரிமா சங்கம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து தேசிய காது கேளாதோா் வார விழா மற்றும் சைகை மொழி தின விழாவைஅரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை கொண்டாடின.

நிகழ்ச்சிக்கு அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவா் எம்.மாறன்பாபு தலைமை வகித்தாா். ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ஆக்னெஸ் பியூலா, சைகை மொழி ஆசிரியா் வேல்முருகன், செவிலியா் சத்தியா, ஆய்வக தொழில் நுட்புநா் ஆா்.மோகன்பிரபு உள்ளிட்டோா் சைகை மொழி மற்றும் காது கேளாதோா் விழிப்புணா்வு குறித்து பேசினா்.

நகர அரிமா சங்கத் தலைவா் ஜெ.பாபு, முன்னாள் தலைவா் ஜேஜி நாயுடு, மண்டலத் தலைவா் டி.கமலஹாசன் ஆகியோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். காது கேளாத, வாய் பேச முடியாத 40- க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா்.

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு அடையாள அட்டை,காது கேட்கும் கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com