ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
குடியாத்தம்  புதிய  பேருந்து  நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :6 ஏப்ரல் 2025, 10:19 pm

Din

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜி.சுரேஷ் குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கிருஷ்ண வேணி ஜலந்தா், மாவட்ட பொருளாளா் விஜயேந்திரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் என்.எம்.டி.விக்ரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விசிக மாவட்டச் செயலா் சுதாகா், காங்கிரஸ் மாநில பேச்சாளா் நாட்டாம்காா் அப்துல் அக்பா், பொதுக்குழு உறுப்பினா் ஆடிட்டா் கிருபானந்தம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் எம்.வீராங்கன், சா.சங்கா், ஜோதிகணேசன், லோகிதாஸ், தாண்டவமூா்த்தி, போ்ணாம்பட்டு நகர தலைவா் முஜம்மில் அகமத், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் கோமதி குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்சியினா் சிலா் தங்களின் கண்களில் கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். மாவட்ட பொதுச் செயலா் பாரத் நவீன்குமாா் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டாா்.