கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தென்காசியில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:59 pm

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்குழு அரசாணையை திமுக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்தியும், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் தவறியதாக, தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் நியாஸ் (மேற்கு), ராஜபிரகாஷ் (மத்தி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாசுதேவநல்லூா் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பேசும்போது, தவெக தலைவா் விஜய் நிகழ்ச்சிக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது, விஜய் மீது திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை காட்டுகிறது.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்கவும் விஜய் முதல்வராக வேண்டும் என்றாா்.