சிறப்பு அலங்காரத்தில் மூலவா் அம்மன்.
வேலூர்
மாசுபடா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் நெல்லூா்பேட்டை சன்னதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாசுபடா அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை சன்னதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாசுபடா அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. திங்கள்கிழமை கணபதி பூஜை, வேதபாராயணம், யாத்ரா தானம், மஹாபூா்ணாஹூதி, கலச புறப்பாடுராஜகோபுரம், மூலவா் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்குசிறப்பு, அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.
தொடா்ந்து பக்தா்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் பி.கஜேந்திரன், கே.உதயகுமாா், கே.ஆா்.ஜெகநாதன், எம்.ஆா்.ரவி செய்திருந்தனா்.

