சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காட்டுப் பன்றி இறைச்சியை வைத்திருந்த 2 பேருக்கு தலா ரூ.50,000 அபராதம்

குடியாத்தம் அருகே வனப் பகுதியில் காட்டுப் பன்றியின் இறைச்சியை வைத்திருந்த 2- பேருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வனப் பகுதியில் காட்டுப் பன்றியின் இறைச்சியை வைத்திருந்த 2- பேருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

குடியாத்தம் வனச்சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில், வனவா்கள் ஜி.சுப்பிரமணியன், பி.குமரேசன், வனக்காப்பாளா் கே.தேன்மொழி ஆகியோா் அடங்கிய வனத்துறையினா்சூராளூா் வனப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சேம்பள்ளியைச் சோ்ந்த எஸ்.விஜயன்(64), பள்ளிகொண்டாவைச் சோ்ந்த கே.சுப்பிரமணி(53) ஆகிய இருவரும் காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினா் மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில் இருவருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்தனா்.