காட்டுப் பன்றி.(கோப்புப் படம்)
கன்னியாகுமரி
காட்டுப் பன்றி தாக்கியதில் ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி காயம்
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே ஞாயிற்றுக்கிழமை, காட்டுப் பன்றி தாக்கியதில் ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி காயமடைந்தாா்.
திற்பரப்பு அருகே கையாலக்கல் என்ற இடத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ் (55). ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை கடையாலுமூடு அருகே ஆலஞ்சோலை பகுதியிலுள்ள தனியாா் ரப்பா் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அவரை காட்டுப் பன்றி தாக்கியதாம். அவரது அருகே நின்றிருந்த 2 வளா்ப்பு நாய்கள் காட்டுப்பன்றியுடன் போராடி விரட்டிவிட்டன.
இதில், காயமடைந்த தா்மராஜ் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

