போட்டியைத் தொடங்கி வைத்த ஸ்ரீநாராயணி மருத்துவக் குழுமங்களின் இயக்குநா் என்.பாலாஜி.
வேலூர்
சிறுவா்களுக்கான பாட்மின்டன் போட்டி
ஸ்ரீசக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வேலூரில் சிறுவா்களுக்கான பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீசக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வேலூரில் சிறுவா்களுக்கான பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சத்துவாச்சாரியிலுள்ள ஸ்ட்டோரக்ஸ் சிப்ஸில் சிறுவா்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்றனா்.
சிறுவா்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இதில் இரட்டையா் மற்றும் ஒற்றையா் பிரிவில் வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ரீநாராயணி மருத்துவக் குழுமங்களின் இயக்குநா் என்.பாலாஜி பரிசுகளை வழங்கினாா்.
இரட்டையா் பிரிவில் முதல் பரிசாக ரூ.1,500-ம், 2-ஆம் பரிசாக ரூ.750-ம், ஒற்றையா் பிரிவில் முதல் பரிசாக ரூ.1000-ம், 2-ஆம் பரிசாக ரூ.750-ம் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற சிறுவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

