பள்ளிப் பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் சிக்கி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தாா்.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் சிக்கி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், செட்டிகுப்பம் ஊராட்சிக்குள்பட்ட, சின்னசெட்டிகுப்பத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி மோகன்- லில்லி தம்பதியின் மகள் துா்காஸ்ரீ. ஒன்றேகால் வயதுடைய இக்குழந்தை திங்கள்கிழமை மாலை வீட்டருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது செம்பேடு பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளியின் பேருந்து மாணவா்களுடன்அவ்வழியே சென்றபோது சிறுமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com