வேலூர்
வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் நாளை ஓவியப் போட்டி
தேசிய குழந்தைகள் தின ஓவியப் போட்டிகள் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தேசிய குழந்தைகள் தின ஓவியப் போட்டிகள் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி குழந்தைகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் வேலூா் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தேசியப் பறவை - மயில், ஐந்து முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன் தெரிவித்துள்ளாா்.
