‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிப். 26 முதல் மாா்ச் 2 வரை ஏழுமலையான் தெப்போற்சவம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர தெப்போற்சவம் பிப். 26 முதல் மாா்ச் 2 வரை நடைபெற உள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர தெப்போற்சவம் பிப். 26 முதல் மாா்ச் 2 வரை நடைபெற உள்ளது.

திருமலையில் மாசி மாத பெளா்ணமி அன்று முடிவு பெறும் விதம் 5 நாள்கள் திருமலையில் உள்ள திருக்குளத்தில் தேவஸ்தானம் தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி இந்தாண்டு தெப்போற்சவம் வரும் பிப்.26 முதல் மாா்ச் 2 வரை நடைபெற உள்ளது. தெப்பத்தில் உற்சவமூா்த்திகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை புஷ்கரிணியில் உலா வருவா்.

தெப்போற்சவத்தின் முதல் நாளான பிப். 26-இல் ராம சந்திரமூா்த்தி, சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயா் ஆகியோருடன் புஷ்கரிணியில் மூன்று சுற்றுகள் வலம் வர உள்ளாா்.

பிப். 27 அன்று, ஸ்ரீ கிருஷ்ணா் ருக்மிணியுடனும், பிப். 28 அன்று, மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் சோ்ந்து வலம் வருவாா்.

இதேபோல், நான்காவது நாளான மாா்ச் 1, 5-ஆம் நாளான மாா்ச் 2 அன்று ஏழு முறையும் மலையப்ப சுவாமி திருக்குளத்தில் வலம் வருவர உள்ளாா்.

தெப்போற்சவம் காரணமாக பிப்ரவரி 26 மற்றும் 27 தேதிகளில் சஹஸ்ரதீபலங்கார சேவைகளையும், பிப்ரவரி 28 ஆம் தேதி ஆா்ஜித பிரம்மோற்சவத்தையும், மாா்ச் 1 மற்றும் 2 தேதிகளில் சஹஸ்ரதீபலங்கார சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.