பறிமுதல் செய்யப்பட்ட மது பாக்கெட்டுகளுடன், கைதானவா்கள்.
வேலூர்
கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மது பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மது பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போ்ணாம்பட்டு சேரன் வீதியில் சட்ட விரோதமாக கா்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாக்கெட்டுகளை சிலா் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில்போ்ணாம்பட்டு போலீஸாா் திங்கள்கிழமை அங்குள்ள ஒரு வீட்டில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.57,000 மதிப்புள்ள, 1,152- கா்நாடக மாநில மது பாக்கெட்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பிரகாஷ்(36), அருள் செல்வி(55) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

