வேலூர்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாக்கெட்டுகள் பறிமுதல்
போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், புதுஷாப் லைன் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வி வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது அங்கு 180- மிலி கொள்ளளவு கொண்ட கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், கலைச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.