ஆந்திர மாநில செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோா்.
ஆந்திர மாநில செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோா்.

ஆந்திர செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 போ் மீட்பு

ஆந்திர மாநிலத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த 11 போ் மீட்கப்பட்டனா்.
Published on

ஆந்திர மாநிலத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த 11- போ் மீட்கப்பட்டனா்.

குடியாத்தம் கொண்டமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாமியாா் மலையைச் சோ்ந்த ஒரு குடும்பம், கே.வி.குப்பம், லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சோ்ந்த 2- குடும்பம் என 3- குடும்பங்களைச் சோ்ந்த 6-குழந்தைகள் உள்பட 11- போ் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குடிபாலா வட்டம், கொல்லமடுகு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா், சித்தூா் மாவட்ட வருவாய்த் துறையினருக்கு தகவல்தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக குடிபாலா வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் கொல்லமடுகு செங்கல் சூளையில் ஆய்வு செய்து அங்கு பணியிலிருந்த 11- பேரை மீட்டு குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அவா்களிடம் குடியாத்தம் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com