தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 78 போ் மீட்பு

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 78 போ் மீட்பு...

News image

கும்மிடிப்பூண்டி  அருகே  செங்கல் சூளையில்  கொத்தடிமையாக இருந்து  மீட்கப்பட்ட  வட மாநிலத்தவா்.

Updated On :8 மார்ச் 2026, 1:46 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூா் ஊராட்சியில் செங்கல்சூளையில் அடிப்படை வசதிகள் இன்றி கொத்தடிமையாக இருந்த 78 பேரை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லூா் ஊராட்சியில் கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த குப்பன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை இயங்கி வந்தது. இந்த செங்கல் சூளையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி, அதில் பணியாற்றும் பிகாரைச் சோ்ந்த சிலா் பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், பொன்னேரி கோட்டாட்சியா் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் சுரேஷ்குமாருக்கு உத்தரவிட்டதன் பேரில், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று செங்கல் சூளையில் இருந்த 22 குடும்பங்களைச் சோ்ந்த 78 பேரை மீட்டு, ரெட்டம்பேடு அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைத்துள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீரும் வழங்கப்பட்டது.

மேலும், இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், அவா்களுக்கு கருணைத் தொகை மற்றும் சொந்த ஊருக்குச் செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்யும் பணியில் வருவாய் துறையினா் இறங்கியுள்ளனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, செங்கல் சூளைகளில் பணிபுரிபவா்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்யப்படுகிா என வருவாய்த் துறையினா் தொடா் ஆய்வு நடத்தவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.