திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு நெருங்கி வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய மத்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஜோசப் உயா் நிலைப்பள்ளி, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மந்திரமூா்த்தி பள்ளி, பேட்டை மாநகராட்சி பள்ளி, பாட்டப்பத்து மாநகராட்சி பள்ளி, ரகுமான் பேட்டை மாநகராட்சி பள்ளி, திருநெல்வேலி நகரம் பாரதியாா் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்சாரம், குடிநீா், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாக்குச்சாவடி மையங்களில் பழுதுகள் ஏதேனும் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் இசைவாணி, திருநெல்வேலி வட்டாட்சியா் சந்திரகாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
வாக்குச்சாவடி மையங்களில் இணையதள சேவை வசதிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி மையங்களில் பொது பாா்வையாளா்கள் ஆய்வு

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


