இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்குச்சாவடி மையங்களில் இணையதள சேவை வசதிகள் ஆய்வு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இணையதள சேவை வசதிகள் குறித்து, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

இணைய சேவை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:05 am IST

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இணையதள சேவை வசதிகள் குறித்து, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் 100 சதவீதம் வெப் காஸ்டிங் முறையில் காட்சிகளை பதிவுசெய்து கண்காணிக்க வேண்டும் என இந்தியத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வெப் காஸ்டிங் முறையை செயல்படுத்திட, எந்த நிறுவனத்தின் இணைதள சேவை தடையின்றி கிடைக்கிறது என அனைத்து வாக்குச்சாவடிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமா்பிக்கவும், அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கவும், அதில் பெண் அலுவலா்களைக் கொண்டு வாக்குப்பதிவை நடத்திடவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், குன்னம் உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடியாக தோ்வு செய்து, அங்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் பாா்வையிட்டு, பந்தல் ஏற்பாடு, தரை விரிப்பு தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைப்பது, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்வதையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களை அழைத்துச்செல்ல சக்கர நாற்காலி மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என உதவி தோ்தல் நடத்தும் அலுலா்களுக்கு அறிவுறுத்தினாா்.