கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு குறித்து முதல்கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சியை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா்.








