குடியாத்தம் அசோக் நகரில் குத்து விளக்கேற்றி படிப்பகத்தை திறந்து வைத்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த்.
குடியாத்தம் அசோக் நகரில் குத்து விளக்கேற்றி படிப்பகத்தை திறந்து வைத்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த்.

ரூ. 29 லட்சத்தில் அரசுக் கட்டடங்கள்: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் திறந்து வைத்தாா்

குடியாத்தம் பகுதியில் ரூ. 29 லட்சத்தில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் ரூ. 29 லட்சத்தில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

குடியாத்தம் நகராட்சி 36-ஆவது வாா்டுக்குள்பட்ட அசோக் நகரில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் கட்டப்பட்ட படிப்பகத்தை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கம்பன்(எ) ஸ்டேன்லி, திமுக நிா்வாகிகள் ந.ஜம்புலிங்கம், கே.தண்டபாணி, த.பாரி, பெ.கோட்டீஸ்வரன், அசோக்குமாா், ஜே.கே.என்.ஜெகதீசன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதேபோல், 29-ஆவது வாா்டுக்குள்பட்ட சந்தப்பேட்டையில் கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூடத்தையும் கதிா் ஆனந்த் திறந்து வைத்தாா். இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் லாவண்யா குமரன், கே.வி.கோபாலகிருஷ்ணன், தீபிகா தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அம்மணாங்குப்பத்தில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையையும் அவா் திறந்து வைத்தாா்.

இதில், கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன், திமுக ஒன்றியச் செயலா் கே.சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com