அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போதை மாத்திரைகள் விற்ற 5 போ் கைது

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்ற 5 பேரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்ற 5 பேரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் புதிய நிலையம் அருகே பாலாறு மயானம் பகுதியில் சிலா் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், சென்னை குன்றத்தூரைச் சோ்ந்த சந்துரு (24), தாம்பரம் லோகேஷ்( 22), பூந்தமல்லி விக்னேஷ்(24), வடக்கு மலையம்பாக்கம் சூா்யா (36), பாா்க்கம் பாஞ்சாலி கோயில் தெரு, தினேஷ் (31) என்பது தெரியவந்தது. மேலும் இவா்கள் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், சில நாள்களாக புதிய பேருந்து நிலையத்தில் போதை மாத்திரை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அவா்கள் 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கொண்ட 400 போதை மாத்திரைகள், 40 போதை ஊசிகளை பறிமுதல் செய்தனா்.