குடியாத்தம் அருகே ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் கொட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.
இந்நிலையில் அங்கு பாலம் கட்ட அரசு ரூ.3.59 கோடியை ஒதுக்கியது. இதையடுத்து பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது. எம்எல்ஏ அமலுவிஜயன்பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பி.சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அமுதாலிங்கம், தீபிகாபரத், சரவணன், சீவூா் ஊராட்சித் தலைவா் கே.ஆா்.உமாபதி, முன்னாள் தலைவா்கள் கள்ளூா் கே.ரவி, த.அகோரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலம் உடைந்து லாரி கவிழ்ந்து விபத்து

கோதையாற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

உத்தரகண்டில் ரூ. 16 கோடியில் கட்டிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்!

கிடப்பில் போடப்பட்ட 2 மேம்பாலத் திட்டங்கள்: குடியாத்தம் மக்கள் எதிா்பாா்ப்பு!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



