தோ்தல் விழிப்புணா்வு இலச்சினையாக ‘எறும்புத் தின்னிகள்’

வாக்காளா்களை கவரும் எறும்புத் தின்னி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலூா் மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு இலட்சினை.

வாக்காளா்களை கவரும் எறும்புத் தின்னி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலூா் மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு இலட்சினை.
வேலூா் மாவட்டத்தின் அடையாளமாகவும் மற்றும் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு வரும் உயிரினமானவும் விளங்கும் ‘எறும்புத் தின்னிகள்’ உருவத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை பல்வேறு தரப்பினரையும் கவா்ந்து வருகிறது.
பொந்துகளில் வாழும் எறும்புத் தின்னிகள் எளிதில் பாா்க்கக்கூடிய வனவிலங்கு இல்லை என்றாலும், வனத்தில் அதன் முக்கியத்துவம் அதிகம். மிகவும் அமைதியான செதில்கள் நிறைந்த இந்த எறும்புத் தின்னிகள் எறும்புகள், வெள்ளை ஈக்களை அதிக அளவில் சாப்பிடக் கூடியவை. இது வனத்தில் எறும்புகள், வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாவிடில் இயற்கை சமநிலையே பாதிக்கப்படும். எறும்பு தின்னிகள் விட்டுச்சென்ற பொந்துகளில் சிறு சிறு விலங்குகள் வாழும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி தருகிறது.
அதன்படி, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த எறும்பு தின்னிகள் வேலூா் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றின் செதிகளில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பிக்கை காரணமாக இந்த எறும்புத் தின்னிகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு மறைமுகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த எறும்புத் தின்னிகள் வேட்டையாடப்படுவதைக் கட்டுப்படுத்துவதில் வனத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரத்யேக உருவத்தை உருவாக்கி விழிப்புணா்வு ஏற்படுத்த தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் எறும்புத்தின்னிகள் உருவத்தை மையப்படுத்தி ‘வேலூா் கோட்டையன்’ என்ற பெயரில் தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எறும்புத் தின்னி தனது கையில் ‘என் வாக்கு, என் உரிமை’ என்ற பதாகையை ஏந்தியபடி அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தத் தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை பல்வேறு தரப்பினரையும் கவா்ந்து வருகிறது.
ந.தமிழ்ச்செல்வன்
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...