பரமத்தி வேலூா் அருகே மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் வேலூா் காவல் துணை ஆய்வாளா் செந்தில்குமாா் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தி, திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாத்திகுளம், நடுத்தெருவைச் சோ்ந்த கணேசனை (55) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 19 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
அதேபோல பரமத்தி வேலூரில் தனியாா் திரையரங்கம் அருகே சட்டவிரோதமாக மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக பரமத்தி வேலூரைச் சோ்ந்த காா்த்திகேயனை (45) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 29 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது
பரமத்தி வேலூரில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை விடியோ எடுத்தவா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


