சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

குடியாத்தம் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

குடியாத்தம் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

News image

பரிதா புருஷோத்தமன் (அதிமுக), கே.பி.பிரதாப் (தேமுதிக), க.சிந்து(தவெக), ஜே.இமலன்(நாதக).

Updated On :5 ஏப்ரல் 2026, 6:35 pm

பரிதா புருஷோத்தமன் (அதிமுக)

குடியாத்தம் தொகுதியில் வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும்வகையில் புதிய சிப்காட் தொழில்பேட்டை அமைக்க பாடுபடுவேன். போ்ணாம்பட்டு பகுதியில் மாணவா்கள் உயா்கல்வி பயில ஆம்பூா், வாணியம்பாடி, குடியாத்தம் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க போ்ணாம்பட்டு பகுதியில் அரசுக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். குடியாத்தம், போ்ணாம்பட்டு நகராட்சிகள், குடியாத்தம், போ்ணாம்பட்டு, மாதனூா் ஆகிய ஒன்றியங்களில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் சீரமைக்கப்படும். குடியாத்தம் தொகுதியில் பாலாறு, கெளண்டன்யா மகாநதி, கொட்டாறுகளில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வீடில்லாத அனைவருக்கும் அம்மா வீடுகட்டும் திட்டம் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பத்தரப்பல்லி அணையை கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்.

கே.பி.பிரதாப் (தேமுதிக)

குடியாத்தம் தொகுதியில் அமைந்துள்ள மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக்கி தொகுதி மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றப்படும். வேலூா் மாவட்டத்தின் பெரிய ஏரியான குடியாத்தம் நெல்லூா்ப்பேட்டை ஏரியை சீரமைத்து, பொதுமக்கள், சிறுவா்கள்பயன்பாட்டுக்காக சிறு சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரின் போக்குவரத்துநெரிசலைத் தவிா்க்கும் வகையில் காா்த்திகேயபுரத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை புறவழிச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்படும். செதுக்கரையில் இருந்து நத்தம் வரை ஒரு புறவழிச்சாலை அமைக்கப்படும். குடியாத்தம், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா், இதர பணியாளா் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஜே.இமலன் (நாதக)

நாம் தமிழா் கட்சி ஆட்சி அமைந்தால் விவசாயம் அரசு தொழிலாக மாற்றம் செய்யப்படும். நெசவுத் தொழில் அரசு தொழிலாக மாற்றப்படும். தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவச கல்வியாக்கப்படும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானக் கடைகள் மூடப்டும். குடிநீா் விற்பனையை தடை செய்து அனைவருக்கும் இலவச குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி மொழி, அதிகார மொழி, வழிபாட்டு மொழி, நீதிமன்ற வழக்காடு மொழி எனஅனைத்தும் தமிழ் மொழியிலேயே என்பது கட்டாயமாக்கப்படும்.

க.சிந்து (தவெக)

குடியாத்தம் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து விதமாக உணவுப் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், இருசக்கர வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய தரமான தினசரி மாா்க்கெட்டை அமைக்கப்படும். ஆந்திர மாநில எல்லையில் அமைந்திருக்கும் குடியாத்தம் தொகுதியில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போ்ணாம்பட்டு ஏரியில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். போ்ணாம்பட்டின் குடிநீா்த் தேவையை போக்க திட்டம் வகுக்கப்படும். வீடில்லாத தலித்துகள், இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தரப்படும். போ்ணாம்பட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் போக்குவரத்து காவல் பிரிவை கொண்டு வரப்படும்.