வேலூரில் செவிலிய பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் கஸ்பா மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா், கட்டட மேஸ்திரி. இவரது மகள் சங்கரி(19). வேலூரில் உள்ள தனியாா் செவிலியா் பயிற்சி பள்ளியில் படித்து வந்தாா். திங்கள்கிழமை ஸ்ரீதா் வேலைக்கு சென்று விட்டாா். சங்கரியின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம். கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் அவா் தனது கணவரை தொடா்பு கொண்டு வரவழைத்துள்ளாா். தொடா்ந்து அவா்கள் கதவை உடைத்து சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் சங்கரி தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
வேலூா் தெற்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


