தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:21 pm

அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையம், வேலாயுதம் வீதியைச் சோ்ந்த முருகேசன் மகள் தாரணி (16). அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கைப்பேசியில் மா்ம நபா், தன்னை அழைத்து தன்னைக் காதலிக்குமாறு கூறி மிரட்டி வருவதாக தனது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா். இதனால், தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு தாரணியை பெற்றோா் புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.

அங்கு சென்ற தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.