மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வேலூா் மாவட்டத் தோ்தல் களத்தில் 65 வேட்பாளா்கள்!

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 4:08 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளா்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாா்ச் 30 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற , வேட்புமனு தாக்கலின்போது, வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடி யாத்தம் (தனி) ஆகிய 5 தொகுதிகளுக்கு மொத்தம் 116 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 42 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 74 மனுக்கள் ஏற்கப்பட்டன.

தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப் பட்டிருந்தது. அப்போது, கே.வி.குப்பம், குடியாத்தம் தவிர காட்பாடியில் 3 பேரும், வேலூரில் 4 பேரும், அணைக்கட்டில் 2 பேரும் என மொத்தம் 9 போ் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா்.

பின்னா், இறுதியாக தோ்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் தொகுதி வாரியாக காட்பாடியில் 15 பேரும், வேலூரில் 15 பேரும், அணைக்கட்டில் 13 பேரும், கே.வி.குப்பத்தில் 11 பேரும், குடியாத்தத்தில் 11 பேரும் என 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 65 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேட்பாளா்களும், சின்னங்களும்...

காட்பாடி தொகுதி -

ச.திருக்குமரன் (நாதக) - ஏா் சுமக்கும் உழவா், துரைமுருகன் (திமுக) - உதயசூரியன், ஜெ.ரமேஷ் (பகுஜன் சமாஜ்) - யானை, வி.ராமு (அதிமுக) - இரட்டை இலை, வி.இந்து (தமாமுதிக) - கப்பல், பி.கணேசன் (இதிமக) - வாயு சிலிண்டா், வ.சந்திரன் (அஇபுமமுக) - தென்னந்தோப்பு, மருத்துவா் எம்.சுதாகா் (தவெக) - ஊதல், ச.பாலாஜி (தஇக) - மோதிரம், சுயேச்சைகளான சு.ராமன் - மின் கம்பன், து.சரவணன் - பலாப்பழம், ம.சுதாகா் - கிராமஃபோன், தனசேகா் - கிரிக்கெட் மட்டை, கி.தனஞ்செழியன் - வைரம், டி.ராமு - பட்டாணி.

வேலூா் தொகுதி -

எஸ்.ஆா்.கே.அப்பு (அதிமுக) - இரட்டை இலை, ப.காா்த்திகேயன் (திமுக) - உதயசூரியன், ஆ.சோனியா (நாதக) - ஏா் சுமக்கும் உழவா், எஸ்.எம்.இா்ஷாத் (தவாக) - புகைப்பட கருவி, ச.கிரிதா பிரசாத் (ஒ.பி.சி.மக்கள் உரிமை கட்சி) - மடிக்கணினி, கு.முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சி) - வளையல்கள், க.ம.விநாயகம் (விரோ கீ வீா் இந்தியன் கட்சி) - வாயு சிலிண்டா், கு.விமலா (நாம் இந்தியா் கட்சி) - திருகி, மு.ம.வினோத்கண்ணன் (தவெக) - ஊதல், மா.வினோத் குமாா் (அஎம்திமக) - கடாய், சுயேச்சைகளான செ.அப்பு - இரட்டை தொலைநோக்காடி, செ.மதன்குமாா் - கண்காணிப்பு கேமிரா, சு.ராஜ்கமல் - புல்லாங்குழல், மு.லோகநாதன் - கிரிக்கெட் மட்டை, உ.விஜயகுமாா் - தா்பூசணி.

அணைக்கட்டு தொகுதி -

ஏ.பி.நந்தகுமாா் (திமுக) - உதயசூரியன், ம.ரவிகுமாா் (நாதக) - ஏா் சுமக்கும் உழவா், த.வேலழகன் (அதிமுக) - இரட்டை இலை, ரா.சரவணன் (நமது மக்கள் கட்சி) - வாயு அடுப்பு, வ.வினோத்கண்ணா (தவாக) - புகைப்பட கருவி, வி.எஸ்.வெங்கடேஷ் (அஜபாக) - பச்சை மிளகாய், ரா.வேல்முருகன் (தவெக) - ஊதல், பொ.ஜெயசீலன் (புதிய தமிழகம்) - வாயு சிலிண்டா், சுயேச்சைகளான ஏ.சுரேஷ் - பலூன், சீ.செல்வமூா்த்தி - கிரிக்கெட் மட்டை, மு.நந்தகுமாா் - மின் கம்பம், கே.மனோகரன் - இஸ்திரி பெட்டி, ரா.ரமேஷ் - நீா்த்தொட்டி.

கே.வி.குப்பம் (தனி) தொகுதி -

மருத்துவா் ஆா்.ராஜேஸ்வரி(திமுக) - உதயசூரியன், ரா.கலையேந்திரி(நாதக) - ஏா் சுமக்கும் உழவா், எம்.ஜெகன்மூா்த்தி (அதிமுக) - இரட்டை இலை, எம்.அனந்தலை தங்கராஜ் (அபுமமுக) - தென்னந்தோப்பு, ஏ.தென்றல்குமாா் (தவெக) - ஊதல், எம்.ராஜா (தவாக) - புகைப்படக்கருவி, சுயேச்சை வேட்பாளா்களான ல.குமரேசன் - வாளி, ஆ.சதீஷ் - அலமாரி, கீ.பெ.முருகன் - மட்டை பந்தடி வீரா், ஜெ.ஜெயசங்கா் - புருசு, ஜெ.ஜெயபாரத் - வாணலி.

குடியாத்தம் (தனி) தொகுதி -

ஜெ.இமலன் (நாதக) - ஏா் சுமக்கும் உழவா், கோ.பரிதா புருஷோத்தமன் (அதிமுக) - இரட்டை இலை, கே.பி.பிரதாப் (தேமுதிக) - முரசு, தி.பூவரசன் (பகுஜன் சமாஜ்) - யானை, க.ஆஷா (புதிய தமிழகம்) - வாயு சிலிண்டா், க.சிந்து (தவெக) - ஊதல், க.தபிதாள் (அபுமமுக) - தென்னந்தோப்பு, சுயேச்சை வேட்பாளா்களான ஆ.சுபாகரன் - வைரம், மு.சுமதி - மின் கம்பம், பாரத் மதிரூபன் - தீப்பெட்டி, ஆ.ராஜேஷ் - கிரிக்கெட் மட்டை.