மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பன்மைத்துவம், சமத்துவத்தை தோ்ந்தெடுப்போம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

News image

அண்ணல் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, வேலூா் விருதம்பட்டு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:10 pm

‘ஒற்றைத் தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தோ்ந்தெடுப்போம்’ என அண்ணல் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அம்பேத்கா் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி கே.வி.குப்பம், விருதம்பட்டு பகுதிகளில் உள்ள அம்பேத்கா் சிலைகளுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்’ என்றாா் அண்ணல் அம்பேத்கா்.

புரட்சியாளா் அம்பேத்கரின் பிறந்த நாளில், அரசமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!. இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.

முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தோ்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்! என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.